அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த பிரபல நடிகை... வெளியான அப்டேட்!
'புஷ்பா 2: தி ரூல்' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார். இது அட்லீ - அல்லு அர்ஜுன் உருவாகும் முதல்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் பிரபல நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளார். அதற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Welcome onboard
QUEEN @deepikapadukone ❤️❤️mam https://t.co/etuhYzbOwj#AlluArjun sir, #SunPictures #AA22xA6#TheFacesOfAA22xA6— atlee (@Atlee_dir) June 7, 2025
அதில், தீபிகாவை சந்தித்து அட்லி கதை சொன்ன போது எடுத்த வீடியோ, அதன்பின் டெஸ்ட் ஷுட்டிற்காக எடுத்த வீடியோ இரண்டும் இடம் பெற்றுள்ளது. ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கப் போகிறார் என்பது அந்த வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது.