பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற #ImenKhalif - ன் தாக்கத்தால் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டும் அல்ஜீரிய பெண்கள்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃபின் சாதனை அல்ஜீரிய பெண்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பலரையும் குத்துச்சண்டையில் ஆர்வம் கொள்ள செய்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பாலின அடையாளம் தொடர்பான சர்ச்சைகளுக்கு நடுவே இமென் கெலிஃப் தங்கப்பதக்கம் வென்றதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் எனப் பலரும் இமென் கெலிஃபின் இந்த வெற்றியைக் கொண்டாடினர். இதனால் தற்போது, பெண்கள் பலரும் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இமென் கெலிஃபை தங்களது முன்மாதிரி எனவும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் :சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம், செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!
இது தொடர்பாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமினா அப்பாஸி என்ற பெண் கூறுகையில் :
"இமென் கெலிஃப் எந்த மாதியான விமர்சனங்களையும் எதிர்கொண்டு சாதிக்கக் கூடியவர். பழமைவாதத்தை கடைபிடிக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களும் குத்துச்சண்டையில் ஈடுபடுவதற்கு இமென் கெலிஃப் வழிவகுத்துள்ளார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில்:
"மத்திய அல்ஜீரியாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இமென் கெலிஃப், இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பாரட்டப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளார். குத்துச்சண்டையை தங்களது கனவாக நினைத்து பயிற்சி பெற்றுவரும் அல்ஜீரிய பெண்கள் பலருக்கும் அவர் உத்வேகம் அளிக்கிறார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.