For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில்வேயின் மிக உயரிய விருதான அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது | தெற்கு ரயில்வே பணியாளர்கள் 9 பேர் தேர்வு!...

07:22 AM Dec 14, 2023 IST | Web Editor
ரயில்வேயின் மிக உயரிய விருதான அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது   தெற்கு ரயில்வே பணியாளர்கள் 9 பேர் தேர்வு
Advertisement

ரயில்வே பணியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு, தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

டெல்லியில் வரும் 15ஆம் தேதி 68 - வது ரயில்வே வார விழா நடைபெற உள்ளது. இதில் இந்திய ரயில்வேயின் 100 சிறந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே பணியாளர்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது, கே.வீரபெருமான், எம்.கே.சுதீஷ்குமார், டி செல்வகுமார், தேஷிதி மதுசூதன் ரெட்டி, ஏ.செல்வராஜா, மதி துர்காதேவி விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், எஸ். மயிலேரி, எஸ் மாரியப்பன் ஆகிய 9 பேருக்கு வழங்கப்படுகிறது.

அதிவிஷிஷ்ட் ரயில் சேவாபுரஸ்கார் - 2023

தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் ஒன்பது பணியாளர்கள் அவர்களின் செயல்திறன்களின் முன்னிலை அடிப்படையில் இவ்விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 15ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் 68 - வது ரயில்வே வார விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அதிவிஷிஷ்ட்ரயில்சேவாபுரஸ்கார்- 2023-ற்கான விருதுக்கு இந்திய ரயில்வேயின் 100 சிறந்த பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிவிஷிஷ்ட்ரயில் சேவாபுரஸ்கார்-2023 I விருதிற்காக தெற்கு ரயில்வேயின் ஒன்பது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஏழு பணியாளர்களும் உள்ளடுங்குவார்கள்.

ரயில்வே பணியாளர்களுக்கான மிக உயரிய கௌரவமான விருதாக கருதப்படும் அதிவிஷிஷ்ட்ரயில்சே வாபுரஸ்கார் - 2023 விருதானது, ரயில்வே அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 15,2023 68-வது ரயில்வே வார விழாவின் போது வழங்கப்படும்.

1.கே.வீரபெருமான், மானாமதுரை, (ட்ராக்மெயின்டெய்னர்)

2. எம்.கே.சுதீஷ்குமார், லோகோபைலட்பாசன்ஞர், ஈரோடு

3. டி செல்வகுமார், டிக்கெட்இன்ஸ்பெக்டர்,

4. தேஷிதிமதுசூதன்ரெட்டி, RPF இன்ஸ்பெக்டர், SRHQ,

5.ஏ. செல்வராஜா, சீனியர்பிரிவுப்பொறியாளர், ஆவடி EMU

6.மதி, துர்காதேவிவிஜயகுமார், தலைமை செவிலியர் கண்காணிப்பாளர், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை

7. இ ஹரிகிருஷ்ணன், ஐஆர்டிஎஸ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர்,, சென்னை,

8.எஸ். மயிலேரி, சீனியர் கோட்டப் பொறியாளர்

9.  எஸ் மாரியப்பன், AXSTE/ ப்ராஜெக்ட்ஸ்/MS.

Advertisement