For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி சுபான்ஷு சுக்லா இந்திய குடியரசு திரௌபதி முர்முவை சந்தித்தார்,
06:09 PM Aug 22, 2025 IST | Web Editor
விண்வெளி சுபான்ஷு சுக்லா இந்திய குடியரசு திரௌபதி முர்முவை சந்தித்தார்,
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா
Advertisement
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். இவருடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் வரை தங்கி, ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட அவர்கள் கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர்.
இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். இதனைதொடர்ந்து  சுபான்ஷு சுக்லா  நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு, அவரது குடும்பத்தினர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்ச்ர் ஜிதேந்திரா சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்பட பலர் உற்சாக  வரவேற்பு அளித்தனர்.மேலும் கடந்த ஆகஸ்ட் 18 அன்று பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை பிரதமர் இல்லத்திற்கு  நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் சுபான்ஷு சுக்லா குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது  குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளியில் தனது அனுபவங்களை குடியரசு தலைவர் முர்முவுடன் பகிர்ந்து கொண்டார். மேலும்
Advertisement
Tags :
Advertisement