#AssemblyElection ஹரியானாவில் ஒரே கட்டமாக அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!
04:26 PM Aug 16, 2024 IST
|
Web Editor
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரியானா மாநிலத்திற்கான தேர்தல் தேதி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டனர். அதே போல ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல் தேதிகளையும் அறிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஹரியானாவில் அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Advertisement
இந்த வருடம் ஹரியானா, ஜார்கண்ட் , மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இன்று டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஹரியானா மாநிலம் - சட்டப்பேரவைத் தேர்தல் :
ஹரியானா மாநிலத்தில் 22 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 90 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியான மாநிலத்தில் தொகுதிகள் மற்றும் வாக்காளர்களின் முழு விவரங்களை காணலாம்.
- மொத்த தொகுதிகள் - 90
- பொதுத் தொகுதிகள் 73, தனித் தொகுதிகள் 17
- மொத்த வாக்காளர் - 2.01 கோடி (ஆண்கள் 1.06கோடி, பெண்கள் 0.95 கோடி)
- இளைய தலைமுறை வாக்காளர்கள் - 40.95லட்சம்
- முதல்முறை வாக்காளர்கள் - 4.52 லட்சம்
- மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 459
- மொத்த வாக்குச்சாவடி மையங்கள் - 20,629
முக்கிய தேதிகள்
- வேட்புமனு தாக்கல் தொடக்கம் : 05-09-2024
- வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : 12-09-2024
- வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் : 16-09-2024
- வாக்குப்பதிவு நாள் : 01-10-2024
- வாக்கு எண்ணிக்கை நாள் : 04-10-2024
Next Article