Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!

02:11 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்  நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 1ம் தேதியுடன்நிறைவடைந்துள்ள நிலையில்  தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” கடந்த மார்ச் 16ம் தேதி நாம் சந்தித்தோம். இப்போது வாக்கு எண்ணிக்கை சமயத்தில் சந்திக்கிறோம். தேர்தலில் போது நடந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விவகாரங்கள் குறித்து விரிவாக பார்க்க போகிறோம்.  நடந்து முடிந்த தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ஒரு உலக சாதனை. இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.

மக்களவை வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளொம். பெண்கள் இளைஞர்கள் என அனைவரும் இந்த தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு அதை வெற்றிகரமாக்கியுள்ளனர். வாக்குப் பதிவிற்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதேபோல 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. 1692 முறை வான்வெளியில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. 68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டது. கிட்டத்தட்ட 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு 540 இடங்களில் மறுவாக்கு பதிவு நடந்த நிலையில் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்கு பதிவு நடந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை அதிலும் அருணாச்சலப் பிரதேசம்,  மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு காரணம் கடுமையான மழையாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக வாக்குப்பதிவாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஷோம்பென் பழங்குடியின மக்கள் முதன் முறையாக வாக்களித்துள்ளனர். பல வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே இலவசமாக தேர்தல் குறித்த விளம்பரங்களை செய்து கொடுத்தனர்.

நக்சல் பாதிப்புகள் இருக்கக்கூடிய மணிப்பூர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வன்முறை நிறைந்த பகுதிகளில் கூட அதிக வன்முறை இல்லாமல் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் பட்டுவாடா உள்ளிட்டவை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 4391 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து முக்கிய தலைவர்களின் ஹெலிகாப்படர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மத்திய அமைச்சராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், முதலமைச்சராகவும் யாராக இருந்திருக்கலாம் அவர்கள் அனைவரது ஹெலிகாப்டர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சரியான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சிகளை தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டோம்

தேர்தல் ஆணையத்தின் மீது தேவையில்லாத சந்தேகங்கள்

தேர்தல் ஆணையத்தின் மீது தேவையில்லாத சந்தேகங்களை மக்களுக்கு ஏற்படுத்தவும் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவும் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். சரியாக தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் மாநில தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த முறை தேர்தல் நேரத்தில் கடுமையான வெப்பநிலை பதிவானதை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அடுத்த முறை அதிக வெப்பம் இல்லாத நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம்.

Tags :
CEC Rajiv KumarDelhiElection2024Jammu and KashmirLok sabh Election2024Rajiv Kumar
Advertisement
Next Article