Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஜிகர்தண்டா டபுள் X' படத்தில் 'அசால்ட்' சேதுவா...? - சம்பவம் செய்த சுப்புராஜ்..!

04:47 PM Nov 10, 2023 IST | Jeni
Advertisement

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகி இருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் x’ படம் எப்படி இருக்கு... வாங்க பாக்கலாம்....

Advertisement

படத்தின் கதை

மதுரையில் பெரிய தாதாவாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரை ஒரு ஹீரோ, கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால், தான் ஹீரோவாக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் லாரன்ஸ். இதற்காக இயக்குநர் ஒருவரை தேடி வருகிறார். சென்னையில் போலீஸ் எஸ்.ஐ.க்கு தேர்வாகிய எஸ்.ஜே.சூர்யா, கொலைப் பழியால் ஜெயிலில் இருக்கிறார். அவரிடம் ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார். எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார். அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குநர் ஒருவரை தேடுவதை அறிந்து, உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடனே பயணிக்கிறார். படம் எடுக்கும் சாக்கில் அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.

இறுதியில் ராகவா லாரன்சை எஸ்.ஜே.சூர்யா கொன்றாரா? எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் ராகவா லாரன்ஸுக்கு தெரிந்ததா? ராகவா லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா படம் எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கார்த்திக் சுப்புராஜ் நுணுக்கமாக பயன்படுத்திய வார்த்தைகள்

மாட்டு மூளை, கோமாறே ஏன்? என்ற வார்த்தைகள் படத்தின் பல இடங்களில் இடம்பெறுகிறது. “3 மணி நேர சினிமா, 30 வருஷ அரசியலை முடித்து விட்டது” என்ற வசனமும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

நடிப்பு, பாடல், இசை

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பிரமாதம். நிமிஷா சஞ்சயன் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். ஏற்கனவே ‘சித்தா’ படத்தில் இவருடைய நடிப்பு பட்டையை கிளப்பியது. அதேபோல் இந்த படத்திலும் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன் என்று நிரூபித்துள்ளார். படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசைதான். பல காட்சிகளுக்கு இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார். மொத்தமாக 4 பாடல்கள் இப்படத்தில் உள்ளது. இதில் ‘மாமதுர அன்னக்கொடி’ என்ற பாடல் படத்திற்கு கிடைத்த வரம்.

படம் பற்றிய அலசல்

படத்தில் சில சீன்களை தவிர்த்து, படத்தின் ஓட்ட நேரத்தை குறைத்திருந்தல் ‘நச்’ என்று இருந்திருக்கும். எத்தனை படங்கள் நடித்தாலும் ராகவா லாரன்ஸுக்கு முனி, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் இடம் பெற்றதுபோல் இந்த படத்திலும் ஒரே ஒரு பாடல்  காளி-க்கான பாடலாக அமைந்துள்ளது. அசால்ட் சேதுவுக்கு கடைசியாக ஒரு போஸ்ட் Credits உள்ளது. அது தான் ஜிகர்தண்டா 2 படத்திற்கு Highlight. ஜிகர்தண்டா XXX- க்கும் ஒரு lead உள்ளது. அந்த lead படி பார்த்தால் எஸ்.ஜே.சூர்யாவும், அசால்ட் சேதுவான பாபி சிம்ஹாவையும் அடுத்த ஜிகர்தண்டா XXX படத்தில் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் படம், ஒரு நல்ல எண்டர்டெய்னராக வெளிவந்துள்ளது.

Tags :
#KarthikSubburajJigarthada2jigarthandaJigarthanda Double XRaghavaLawrenceSJSuryah
Advertisement
Next Article