Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அசாம் : குடும்பத்தினருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு!

அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
12:01 PM Sep 07, 2025 IST | Web Editor
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற முதலமைச்சர் ஹிமந்த பிஷ்வா தனது முதல் சுதந்திர தின உரையில் ‘மாத்ரி பித்ரி வந்தனா’ திட்டத்தில் அரசு ஊழியர்கள் பெற்றோர்களுடன் நேரத்தை செலவு செய்வதற்காக இரண்டு நாட்கள் சாதாரண விடுப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement

இந்த திட்டத்தின் கீழ் வருகிற நவம்பர் 14, 15ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பை பெற (சி.எல்.), அரசு அனுமதிக்கிறது. இந்த விடுமுறையை அதற்கான வழிகாட்டலின் அனுமதியுடன் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில் மாநில ஆளுநரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Tags :
announcedassamEmployeesgovernmentSpecial holiday
Advertisement
Next Article