For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!

07:39 AM Jul 09, 2024 IST | Web Editor
அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம்   23 லட்சம் மக்கள் பாதிப்பு
Advertisement

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாம் உள்பட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மலைப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாதலமான டல்ஹவுசியில் 31 மில்லி மீட்டர் மழையும், மணாலியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வழக்கமாக 35 மில்லி மீட்டர் அளவுக்கே மழை பதிவாகும் நிலையில், 72 புள்ளி ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு தற்போது மழை பொழிந்துள்ளது. இதற்கிடையே தர்மசாலாவில் அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழிந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு!

அசாமில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், 28-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும், சுமார் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும்,  மொத்தமாக 35 மாவட்டங்கள் அசாம் மாவட்டத்தில் உள்ள நிலையில், 30 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement