For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!

06:30 PM Jul 10, 2024 IST | Web Editor
அசாம் வெள்ளம்  காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு
Advertisement

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கினால் நேற்று, அதற்கு முன்தினம் என 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அசாமில் மட்டும் 46. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அசாமில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

29 மாவட்டங்களில் குறைந்தது 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் தர்ராங், கச்சார், பார்பெட்டா மற்றும் கோலாகாட் போன்ற அசாமின் மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன. தற்போது அசாம் முழுவதும் 698 நிவாரண முகாம்களில் 39,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000க்கும் மேற்பட்ட மக்கள், 635 விலங்குகள் வெள்ளப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் பத்திரமான வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் கோனாலி கோஷ் கூறுகையில், அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 159 வன விலங்குகள் இறந்துள்ளன. வெள்ள நீரில் மூழ்கி 128 மான்கள், 9 காண்டாமிருகங்கள், 2 சதுப்புநில மான்கள் உள்ளிட்ட 159 வன விலங்குகள் இறந்துள்ளனர். அதேசமயம் 12 மான்கள், நீர் நாய் உள்ளிட்ட 133 விலங்குகளை மீட்டுள்ளோம். பூங்காவில் 111 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 7 விலங்குள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காசிரங்கா பூங்காவில் மொத்தம் 233 வன முகாம்கள் உள்ளதாகவும், தற்போது வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டு வருகின்றது. ஆனால் பூங்காவில் உள்ள 62 வன முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவற்றில் நான்கு முகாம்கள் காலி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement