For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்

09:45 AM Feb 24, 2024 IST | Jeni
இஸ்லாமிய திருமணம்  விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் 1935 - ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இந்நிலையில், அசாமில் இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935-ஐ ரத்து செய்ய மசோதா கொண்டு வர இருப்பதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “பொது சிவில் சட்டம் அசாமில் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் முன்னதாக அறிவித்துள்ளார். இன்று மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அசாம் முஸ்லீம் திருமணம் & விவாகரத்து பதிவு சட்டம் 1935-ஐ ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இனி இந்த சட்டத்தின்கீழ் எந்த இஸ்லாமியரும் திருமணத்தையோ விவகாரத்தையோ பதிவு செய்ய முடியாது. இந்த விவகாரங்கள் அனைத்தும் நாம் ஏற்கெனவே வைத்துள்ள திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935-ஐ ரத்து செய்ய மசோதா கொண்டு வர அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அசாம் சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags :
Advertisement