For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AsianHockeyChampionship: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

09:03 PM Sep 08, 2024 IST | Web Editor
 asianhockeychampionship  சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Advertisement

8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகியது. 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதனையும் படியுங்கள் : #Paralympics தொடர் இன்றுடன் நிறைவு... 29 பதக்கங்களுடன் ஜொலிக்கும் இந்தியா!

அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங், உத்தம் சிங் மற்றும் அபிஷேக் தலா ஒரு கோல் அடித்தனர்.

Tags :
Advertisement