For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசிய இளையோர் போட்டி - கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:42 PM Oct 24, 2025 IST | Web Editor
பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய இளையோர் போட்டி   கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Advertisement

மேற்காசிய நாடான பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இதில் கபடி போட்டியில் பங்கேற்ற இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.

தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்"

என்று தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement