For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் - இந்தியா ஹாட்ரிக் வெற்றி..!

06:45 AM Oct 31, 2023 IST | Web Editor
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்   இந்தியா ஹாட்ரிக் வெற்றி
Advertisement

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் அக்டோபர் 27 தொடங்கியது. ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.  இந்தியாவுக்காக தீபிகா (15'), சலிமா டெடெ (26') ஆகியோர் கோலடிக்க, சீனாவுக்காக ஜியாகி ஜோங் (41') ஸ்கோர் செய்தார்.  மற்ற போட்டிகளில்  ஜப்பான் 4-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. அதேபோல மலேசியா - தென் கொரியா ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.  இந்தியா அடுத்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஜப்பானை இன்று சந்திக்க உள்ளது.  இதேபோல இன்றைய ஆட்டத்தில் தென்கொரியா தாய்லாந்து, மலேசியா சீனா அணிகளும் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் 43 தோல்விகளை சந்தித்ததன் மூலம்  அதிக தோல்விகளை  சந்தித்த அணியாக  இலங்கை உள்ளது.  இதற்கு முன்பு ஜிம்பாப்வே 42 தோல்விகளுடன் அந்த இடத்தில் இருந்தது.

Tags :
Advertisement