For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Asian Champions Trophy Hockey 2024 - கொரியாவை வீழ்த்தி இந்தியா முதலிடம்!

04:05 PM Sep 12, 2024 IST | Web Editor
asian champions trophy hockey 2024   கொரியாவை வீழ்த்தி இந்தியா முதலிடம்
Advertisement

இன்று நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா,  3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை தோற்கடித்து தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

Advertisement

சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த செப்.8-ம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் இந்தியா தனது நான்காவது லீக் ஆட்டத்தில்  3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து, தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, ஏற்கனவே சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கிலும், கடந்த ஆண்டு ரன்னர் அப் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. தொடர்ந்து இன்று தென்கொரியாவை வீழ்த்தி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வரும் சனிக்கிழமை கடைசி குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

Tags :
Advertisement