Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசியா கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்!

07:43 AM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

ஆசி நாடுகளுக்கு இடையிலான 9வது ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் தொடங்குகிறது.

Advertisement

ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இன்று (19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பெண்கள் ஆசிய கோப்பை முதலில் ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட போட்டியாக 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது தொடர்ந்து 4 கோப்பைகளுக்கு பிறகு 2012ம் ஆண்டு முதல் டி20 ஆட்டங்கள் கொண்டதாக ஆசிய கோப்பை நடத்தப் படுகிறது.

இது வரை நடந்த 8 ஆசிய கோப்பைகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆசிய கோப்பை வரலாற்றில் ஆசிய அரசியாக இந்திய பெண்கள் அணி திகழ்கிறது.இப்போது 9வது ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 4 அணிகளை கொண்ட 2 பிரிவுகளாக களம் காணுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும், அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 26ம் தேதியும் நடக்கும். இறுதி ஆட்டம் ஜூலை 28ம்தேதி இரவு நடத்தப்படும். எல்லா ஆட்டங்களும் தம்புல்லாவில் மட்டுமே நடக்க இருக்கின்றன.

Tags :
Indian Cricket TeamSports UpdateWomen cricket
Advertisement
Next Article