Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசியக் கோப்பை மோதல் : ஹாரிஸ் ரவுப் 2 போட்டிகளில் விளையாட தடை, சூர்யகுமாருக்கு அபராதம் - ஐசிசி அதிரடி..!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மோதலில் ஈடுபட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
07:34 AM Nov 05, 2025 IST | Web Editor
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மோதலில் ஈடுபட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
Advertisement

கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. இந்த சம்பவங்கள் ஆசிய கோப்பையில் இரு நாடுகளுக்கிடையிலான போட்டியிலும் எதிரொளித்தது.

Advertisement

இந்தத் தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்​திய அணியின் கேப்டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் கேப்​டன் சல்மான் அலி அகா​ இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்​குவதை தவிர்த்தனர்.

மேலும் போட்டி முடிவடைந்த பின்​னரும் இரு அணி வீரர்​களும் கைக்குலுக்​கும்  நிகழ​வில்​லை. மேலும் போட்டியின் போது அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் தனது பேட்​டை துப்​பாக்கி போன்று வைத்து ரசிகர்​களை நோக்கி சுடு​வதை போன்று சைகை காட்டினார். அத்துடன் பாகிஸ்தான் வேகப்பந்து பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் ரசிகர்களை நோக்கி சைகை காட்டியதும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பதிலடியாக ஹாரிஸ் ரவுப்பின் விக்கெட்டை எடுத்த  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்று  சைகை காட்டி பதிலடி கொடுத்தார். போட்டியின் நடுவே இரு நாட்டு தலைவர்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் சூர்யகுமார் யாதவ், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “லீக் சுற்றின் அடிப்படையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் இருவருக்கும் தலா 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு 1 தகுதியிழப்புப் புள்ளியும், இறுதிப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும், ஹாரிஸ் ரௌஃபுக்கு மீண்டும் 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஹாரிஸ் ரௌஃபுக்கு 4 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

Tags :
AsiaCupCricketHarrisRoufujuspritbumbralatestNewsSuryaKumarYadav
Advertisement
Next Article