இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்!
அவசர காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தொடர் 1 - 1 என சமனில் இருக்கும் நிலையில், ராஜ்கோட்டில் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இதுவரை 250-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி, மொத்தம் 727 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட் – இந்திய வீரர் அஸ்வின் சாதனை!
அதனை பூர்த்தி செய்யும் வகையில், இப்போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து வீரர் ஸாக் க்ராலியின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச பந்துவீச்சாளராக என்ற வரலாறு படைத்தார்.
இந்நிலையில், அவரச காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக, அவருடன் இருக்க அஸ்வின் சென்னை விரைந்துள்ளார். அணியின் முக்கிய வீரர் திடீரென விலகியிருப்பது கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், அஸ்வினின் தாயார் பூரண குணமடைய பிரார்த்திப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.