#IndvsBan | டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் : வால்ஷை பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வால்ஷ் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது. இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : ChessOlympiad | தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி!
இந்நிலையில், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து, அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 522 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கர்ட்னி வால்ஷை (519 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேறினார்.