For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

12:51 PM Oct 03, 2024 IST | Web Editor
 mahavishnu  க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
Advertisement

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த மாதம் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த மாதம் 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமின் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து காவல்துறையினர் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : “காந்தி முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்” | #Parliament -ல் சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையடுத்து ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Advertisement