வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!
கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.
இதையும் படியுங்கள் : இது புதுசா இருக்குண்ணே! – ஒரே செடியில் உருளைக்கிழங்கு, தக்காளியை விளைவித்த இளைஞர்
இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு சாம்பலை கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசினார். இந்த சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, அவர்கள் 40 நாள் தவக்காலத்தை தொடங்கினர்.