புரட்டாசி மாதம் முடிந்ததால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்!
09:04 AM Oct 20, 2024 IST
|
Web Editor
Advertisement
புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் களைகட்டியது.
Advertisement
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சிலர் அசைவ உணவுகளை உண்ணாமல் இருப்பது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க வந்தனர்.
மழை பெய்த காரணத்தால் வியாபாரிகள் நனைந்தபடியே விற்பனையில் ஈடுபட்டனர். மீன்களை வாங்க வந்தவர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.ஒரு கிலோ வஞ்சிரம்- ரூ.950, சங்கரா- ரூ.500- 550, இறால்- ரூ. 450- 550க்கு விற்பனை ஒரு கிலோ நண்டு- ரூ.300-400, வவ்வால்- ரூ.400-500க்கு விற்பனையாகிறது.
Next Article