Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

03:23 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.  இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது.  கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது , டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்தது டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Arvind KejriwalCBIDelhi CourtEDexcise policy caseextendedJudicial Custodymoney laundering casenews7 tamilNews7 Tamil UpdatesSpecial JudgeVideo Conference
Advertisement
Next Article