Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

11:06 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால், போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத் துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார்.

கொள்கை உருவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கேஜ்ரிவாலின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்ய விரும்புகிறது. ஆனால், இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் கேஜ்ரிவால் கூறிவருகிறார். அவர் விசாரணையை தவிர்ப்பது தொடர்பாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமீபத்தில் தாக்கல் செய்தது.

இவ்வழக்கில் கேஜ்ரிவால் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும், புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேஜ்ரிவாலிடம் வழங்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.

அதேவேளையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று (வியாழக்கிழமை) இரவு அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,   “தேர்தல் தோல்வி பயத்தால் பாஜக அரசு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துள்ளது. பாஜகவின் கொடுங்கோன்மை செயல் பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. நடவடிக்கைகள் பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறது.  மத்திய அரசின் கொடுங்கோன்மை செயல் இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
Arvind KejriwalCMO of DelhiMK Stalin
Advertisement
Next Article