For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

07:28 PM Jan 18, 2024 IST | Web Editor
4வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
Advertisement

அமலாக்கத்துறை 4-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மனை அனுப்பியதைத்தொடர்ந்து அவர் நிராகரித்தார்.

Advertisement

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரின் விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அது அரசியல் நோக்கத்தில் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார்.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ்!

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அன்றும் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கும் வகையில் 10 நாள் தியான பயற்சிக்காக பெயர் குறிப்பிடாத இடத்துக்கு சென்று அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார். இதையடுத்து, அரவிந்த கெஜ்ரிவால்  ஜனவரி 3-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ம் தேதி 4-வது முறையாக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனில் இன்று (ஜன. 18) ஆஜாராக வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை. மேலும், மக்களவை தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கெஜ்ரிவால் கோவா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement