Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

01:17 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நாளை மறுநாளோடு கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.  ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
Arvind KejriwalBailDelhi excise policyPetitionRouse Avenue District Court
Advertisement
Next Article