அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை - டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட, ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ந் தேதி விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தது. நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தியது. அப்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்தது.
அத்துடன் விசாரணைக்கு இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான பெஞ்ச், விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடைவிதித்தது.