For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது | பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது -அகிலேஷ் யாதவ் கண்டனம்!

04:56 AM Mar 22, 2024 IST | Web Editor
அரவிந்த் கெஜ்ரிவால் கைது   பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது  அகிலேஷ் யாதவ் கண்டனம்
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு  சமாஜ்வாதி கட்சித் தலைவர்  அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அகிலேஷ் யாதவ் கண்டனம்:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று தெரியும், இந்த பயத்தின் காரணமாக, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படியாவது மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது, கைது என்பது ஒரு சாக்கு. இந்த கைது ஒரு புதிய மக்கள் புரட்சியை பிறப்பிக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement