Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

12:29 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஜூலை 12ஆம் தேதி, பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதனைதொடர்ந்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நியாயமான எந்தவொரு காரணமும் இல்லாமல் சிபிஐ கைது செய்ததாகக் கூற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சிரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
AAPArvind KejriwalCBIDelhi Excise Policy caseSupreme court
Advertisement
Next Article