Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஷாங்​காயில் அருணாச்சலைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் - முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்

ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 
05:56 PM Nov 25, 2025 IST | Web Editor
ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 
Advertisement

அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங்ஜோம் தாங்​டாக் என்பவர் லண்டனில் இருந்து ஜப்​பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது வழி​யில் சீனாவின் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இறங்கி மாற்று விமானத்தில் ஜப்​பான் செல்ல திட்டமிடப்​பட்​டிருந்​தார். அதன்படி கடந்த 21ம் தேதி ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் பெமா வாங்ஜோம் தாங்​டாக் தரை​யிறங்​கினார். ஆனால் அப்போது அங்கிருந்த சீன குடி​யுரிமை அதி​காரி​கள் அருணாச்​சலப் பிரதேசம் சீனா​வில் இருக்​கும் பகுதி எனவும் அதனால் பெமா வாங்ஜோமின் இந்திய பாஸ்​போர்ட் செல்​லாது எனவும் கூறி அவரை கைது செய்​தனர்.

Advertisement

பெமா வாங்ஜோமை ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் சிறைவைத்த அதிகாரிகள் அவரின் பாஸ்​போர்ட்டை முடக்கி, ஜப்​பான் செல்​வதை​யும் தடுத்து நிறுத்​தினர். மேலும் சீன அதி​காரி​கள் பெமா வாங்ஜோமை கேலி செய்​தும், விமான நிலை​யத்​தின் உணவு விடுதி உள்ளிட்ட வசதி​களை மறுத்தும் துன்புறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பெமா வாங்ஜோம் ஷாங்​காய் நகரில் உள்ள இந்​திய தூதரகத்தை தொடர்பு கொண்​ட நிலையில் , இந்​திய தூதரக அதி​காரி​கள் தலை​யிட்டு அவரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்​தனர்.

இதனிடையே பெமா வாங்ஜோம் தேங்​டாக், “அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியர்​கள் வெளி​நாடு​கள் செல்​லும்போது, அவர்​களின் பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்பட வேண்​டும்" என கூறி​யுள்​ளார்.

இந்த நிலையில்  இச்சம்பவத்திற்கு அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகளான பெமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்தியதும், இன ரீதியாக கேலி செய்வததும் மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும்.

இத்தகைய நடத்தை சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் விளைவிப்பதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Arunachal PradesharunachalCMChinese officialsindianpassengerlatestNewsShanghai airport
Advertisement
Next Article