For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அருண் விஜயின் #RettaThala படப்பிடிப்பு நிறைவு!

09:21 PM Oct 19, 2024 IST | Web Editor
அருண் விஜயின்  rettathala படப்பிடிப்பு நிறைவு
Advertisement

அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடித்த 'மிஷின் சாப்டர் ஒன்’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இதனையடுத்து அருண் விஜய் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வணங்கான் ’என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில் இவர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரெட்ட தல படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

https://twitter.com/BTGUniversal/status/1847601086238249467

சமீபத்தில் நடிகர் அருண் விஜய் 'ரெட்ட தல' படக்குழுவினருக்கு அசைவ விருந்தளித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 'எங்கள் அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி' என்றும் அதில் பதிவிட்டுள்ளது.

Advertisement