For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நடிகர்கள் சூரி, அருண் விஜய், இயக்குநர் ஏ.எல்.விஜய் பார்வையிட்டனர்!

09:28 AM Jan 17, 2024 IST | Web Editor
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு   நடிகர்கள் சூரி  அருண் விஜய்  இயக்குநர் ஏ எல் விஜய் பார்வையிட்டனர்
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பார்வையிட்டனர். 

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அருண் விஜய்.  இவர் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியுள்ளது.  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன்,  நிமிஷா சஜயன், இயல் என பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அருண் விஜய் - இயக்குநர் விஜய் கூட்டணியில் நல்ல ஆக்ஷன் திரைப்படமாக மிஷன் சாப்டர் 1 வெளிவந்துள்ளது.  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மிஷன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,  இப்படம் உலகளவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் தற்போது வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் பார்வையிடவந்தனர்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று(ஜன.,17) காலை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்க விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்,  ஜல்லிக்கட்டை நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் பார்வையிடவந்துள்ளனர்.  மேலும், நடிகர் சூரியும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தார்.  அவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தனர்.

Advertisement