Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் | தமிழ்நாடு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

02:57 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆருத்ரா,  ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த ஆருத்ரா,  ஹிஜாவு,  ஐஎப்எஸ் நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த மோசடி விவகாரத்தில் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர்கள், தலைமறைவானவர்களை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து பல கோடி ரூபாய் பணம்,  முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோசடி விவகாரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏமார்ந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், முதலீடுகளைப் பெற்று, மோசடி செய்த நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த மனுவில்,  மோசடி செய்து திரட்டப்பட்ட தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால்,  இந்த வழக்குகளை அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆருத்ரா,  ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
aarudhraChennaiscam
Advertisement
Next Article