Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

10:32 AM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகல நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் விழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (டிச.26) விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை (டிச.27) மதியம் சுமார் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆருத்ரா தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை
ஆயிரம் கால் மண்டபத்திற்க்கு கொண்டு வந்து இன்று அதிகாலை தீட்சிதர்கள்
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதையும் படியுங்கள் : பாக்ஸிங் டே டெஸ்ட் – தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி!

அதனையடுத்து திருத்தேர்களானது‌ சிதம்பரத்தை சுற்றியுள்ள கீழ வீதி வழியாக வலம் வந்து இன்று மாலை சுமார் 5 மணியளவில் கீழ் வீதியில் உள்ள நிலையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து 1000-க்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவசிவ என கோஷங்களோடு ஆடல் பாடலுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி செய்து
தரப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர், மருத்துவ துறையினர்,பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.  பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாளை நடைபெற இருக்கின்ற ஆருத்ரா தரிசன விழாவிற்க்கு தற்போது பொது
தீட்சிதர்கள் சார்பில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Arudra Darshanchariot festivalChidambaramdevoteesNataraja temple
Advertisement
Next Article