For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைஞர் பன்னாட்டு அரங்கம் - டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

01:02 PM Oct 13, 2024 IST | Web Editor
கலைஞர் பன்னாட்டு அரங்கம்   டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
Advertisement

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

Advertisement

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைய இருக்கிறது. இந்நிலையில் இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.108 கோடியிலும் அமையவுள்ளது.

திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபடவுள்ளது. மேலும் வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் ஆகிய பணிகள் ரூ. 105 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பபணித்துறை திட்டம் தீட்டியுள்ளது.

Tags :
Advertisement