" கலைஞர் நூற்றாண்டு விழா " - டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறையினர் திட்டம்..!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறை திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து வருகிற டிசம்பர் 24ம்
தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதுவரை யாரும் காணாத வகையில், நாடே வியந்து போகும் அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தபோவதாகவும், இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மூத்த நடிகர்களான நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் , அஜித் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு, விழாவினை சிறப்பாக
கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் துறை சங்கம் சார்பில் ஆர்.கே செல்வமணி,
இயக்குனர்கள் பேரரசு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தானு, ராஜன், நடிகை லதா
போன்றோர்கள் கலந்து கொண்டனர்., மேலும் தமிழ் திரைத்துறை அனைத்து சங்கங்கள் சார்பாக பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்ததாவது..
” முதலில் கலைஞருக்கு நன்றி. தமிழ் திரைப்படத்தில் அனைத்து சங்க
உறுப்பினர்களையும் ஒரே மேடையில் அமர வைத்துள்ளார் அதற்கு முதலில் நன்றி கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் டிசம்பர் 23 மற்றும் 24 இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது. இவர் வருவாரா அவர் வருவாரா என இல்லாமல் திரைத்துறையினர் 100% அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளோம். விஜய்,அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.கலைஞர் நூற்றாண்டு விழாவில் 20 நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம்.
தருகிறோம். எங்களுக்கு பணம் அதற்கு தேவையில்லை. திரைப்படம் மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு சமூக நீதி, சமத்துவபுரம், உழவர் சந்தை, கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற சிந்தனைகளை சிந்தித்து அமல்படுத்திய கலைஞருக்கு இந்த விழாவை முன்னெடுப்பது தான் நம் அவருக்கு செலுத்தும் நன்றி.” என ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தேனாண்டாள் முரளி தெரிவித்ததாவது..
கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கான இடம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்தான். திறந்த வெளியாக இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு விழா சிறப்பாக எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். சேப்பாக்கம் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்பதால் தேர்வு செய்துள்ளோம். டிசம்பர் 24ஆம் தேதி மழை இருக்காது என நம்புகிறோம்.
விஜய் அஜித் வருவார்கள் என்று கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. நாங்கள்
எல்லோருக்கும் அழைப்பு விடுப்போம். எங்களின் கடமை எல்லாரையும் அழைப்பதுதான். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி
பொதுமக்களுக்கு இலவசமான பாஸ் QR Code வசதியுடன் வழங்கப்படும்.
பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி உண்டு. கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி நடைபெறும்.” என தெரிவித்தார்.