For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செயற்கை இனிப்பூட்டிகளால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

09:58 AM Aug 07, 2024 IST | Web Editor
செயற்கை இனிப்பூட்டிகளால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பா  ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

தேநீர், காபியில் செயற்கை இனிப்பூட்டிகளை சேர்த்துக் கொள்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Advertisement

சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை, சமீபத்தில் 179 டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இது தொடர்பாக எம்டிஆர்எஃப் தலைவரும், சர்க்கரை நோய் முதுநிலை மருத்துவ நிபுணருமான வி.மோகன் கூறியதாவது:

“சர்க்கரை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக பல வகையான செயற்கை இனிப்பூட்டிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் கலோரி நிறைந்த இனிப்பூட்டிகள் தீங்கு விளைவிப்பவை. அதேவேளையில், சுக்ராலோஸ் எனப்படும் சர்க்கரையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சேர்மம் மூலமாக உருவாக்கப்படும் இனிப்பூட்டிகள் அனைவருக்கும் உகந்ததாக உள்ளது.

இருந்த போதிலும், இத்தகைய இனிப்பூட்டிகளால் உடல் பருமன் அதிகரிக்கலாம். இதய பாதிப்புகள் ஏற்படலாம். பல்வேறு உடல் நல பிரச்னைகள் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. ஆனால், அதனை உறுதிசெய்ய இதுவரை உலக அளவில் எந்த ஆதாரப்பூர்வ ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் 179 பேரைக் கொண்டு அந்த ஆய்வை முன்னெடுக்க நாங்கள் முடிவு செய்தோம்.

அவர்கள் அனைவருமே சர்க்கரை நோய்க்குள்ளான போதிலும் டீ, காபியில் ஓரிரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்துக் கொள்பவர்களாக இருந்தனர். அவர்களில் பாதி பேரை சர்க்கரை சேர்த்து பானங்களை அருந்த அறிவுறுத்தப்பட்டது. மீதி பேரை அதற்கு மாற்றாக சுக்ராலோஸ் இனிப்பூட்டியை சிறிதளவு பயன்படுத்த வைத்தோம். மூன்று மாத கால ஆய்வுக்குப் பிறகு சர்க்கரை சேர்த்துக் கொண்டவர்களை விட சுக்ராலோஸ் பயன்படுத்தியவர்களின் சராசரி ரத்த சர்க்கரை அளவு சற்று குறைந்திருந்தது.

அதேபோன்று இடுப்பு சுற்றளவு, உடல் பருமன், உடல் நிறை அளவு (பிஎம்ஐ) ஆகியவையும் கணிசமாக குறைந்திருந்தன. உடலில் கொழுப்புச் சத்தும் சற்று குறைந்திருந்தது. இவை அனைத்துமே இதய ரத்த நாளங்களை பாதுகாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement