For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் - மருத்துவமனை தகவல்!

10:32 AM Nov 20, 2023 IST | Web Editor
விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்   மருத்துவமனை தகவல்
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தொடர்ந்து 3 வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.  இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே  பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே  அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு,  செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார்.  ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.  வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மார்பு சளி மற்றும் இருமல் அதிகமாக இருந்தன் எதிரொலியாக மூச்சு விடுவதில் சீரான நிலை இல்லாததால், சிரமப்படுகிறார்.  அதனால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

அவர் சினிமாவில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பின் போது உடல் முழுவதும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.  காயம், வயது மூப்பு போன்ற காரணங்களால் அவருடைய உடல் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு இது போன்று உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement