Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘Article 370’ - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

12:27 PM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

'Article 370' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கித்தில் உருவான திரைப்படம் 'Article370'.  இந்த திரைப்படம் பாலிவுட் ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அருண் கோவில், கிரண் கர்மார்கர், ராஜ் அர்ஜுன், சுமித் கவுல், யாமி கௌதம் மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார் மற்றும் லோகேஷ் தார் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்

ட்ரெய்லர் வெளியானது முதலே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதம் மற்றும் ஊழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், நேற்று (பிப். 23 ) திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே 'Article 370' திரைப்படம் முதல் நாளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ. 5.75 கோடியை ஈட்டியுள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்களை பெற்று வரும் 'Article 370' தொடர்ந்து வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
article 370Arun GovilBox Office CollectionFilmKiran KarmarkarPriyamaniYami Gautam
Advertisement
Next Article