ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் - கடந்து வந்த பாதை!
12:49 PM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரை கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
Advertisement
- ஆகஸ்ட் 5, 2019 - ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு
- ஆகஸ்ட் 9, 2019 - ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு
- ஆகஸ்ட் 9, 2019 - வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- ஆகஸ்ட் 11, 2019 - வழக்கறிஞர் ஷாகிர் ஷபீர், முகமது அக்பர் லோன் உள்ளிட்டோர் வழக்கு
- ஆகஸ்ட் 28, 2019 - முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது
- அக்டோபர் 1, 2019: நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷண் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, வழக்கை நவம்பர் 14, 2019 முதல் விசாரிக்க முடிவு
- ஜூலை 3, 2023: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது
- ஜூலை 11, 2023: வழக்கை ஆகஸ்ட் 2, 2023 முதல் விசாரிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முடிவு
- டிசம்பர் 11, 2023 - அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பு
தீர்ப்பின் முக்கியம் அம்சங்களில் சில:
- 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்
- 2024 செம்படம்பருக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
- ஜம்மு, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை விரைவில் வழங்க வேண்டும்
- லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என தீர்ப்பு