For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங் !

2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதினை இந்தியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் வென்றுள்ளார்.
10:19 PM Jan 25, 2025 IST | Web Editor
2024 ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங்
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள்,டெஸ்ட் , டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த கவுரத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Advertisement

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரை பரிந்துரைத்தது.

அதன்படி, சிறந்த ஆண்கள் டி20 வீரராக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement