மாவட்ட ஆட்சியர் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது!
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வருவதாக கூறி, ரூ. 27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இவரின் சொத்து வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர், தான்
ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறி இளங்கோவனிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.
ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு இளங்கோவன் கேட்டுள்ளார். ஆனால் வைஷ்ணவ் தர மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி இளங்கோவன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 16ஆம் தேதி புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆனந்த் வைஷ்ணவ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலி ஐஏஎஸ் அதிகாரியான ஆனந்த் வைஷ்ணவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.