பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது!
பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர்
கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகத் தர்மபுரியைச்
சேர்ந்த ரமேஷ் பாபு (57) என்பவர் நேற்று வந்தார். அப்போது அவர் தன்னை
நீதிபதி என்று தெரிவித்து ரோப்காரில் முன்னதாக செல்ல அனுமதிக்குமாறு கேட்டு
உள்ளார். உடனடியாக இதனையடுத்து அவரிடம் கோவில் ஊழியர்கள் அடையாள அட்டையைக் கேட்ட பொழுது அடையாள அட்டை காட்ட மறுத்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ரமேஷ்பாபுவிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியதும், தான் தர்மபுரி மாவட்ட நீதிபதியாகப் பணி செய்வதாகவும், தற்போது தேர்தல் பணி காரணமாகச் சேலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் தர்மபுரி மற்றும் சேலம் போலீசார் மூலம் விசாரணை செய்ததில் ரமேஷ் பாபு பொய் சொல்வது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் தர்மபுரி பாரதியார் புரம்
பகுதியை சேர்ந்தவர் என்றும், எம்.ஏ.பொருளாதாரம் படித்துள்ளதாகவும்
தெரிவித்தார். மேலும் இவர் சுற்றுலா அழைத்துச்செல்லும் தொழிலில் ஈடுபட்டதும்
தெரியவந்தது. மேலும் இதுபோல பலமுறை நீதிபதி என்று சொல்லி பழனி கோவிலுக்கு
வந்து தரிசனம் செய்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து ரமேஷ்பாபுவை கைது செய்த போலீசார் அடிவாரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய மன்றம் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.