For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் - இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

08:20 AM Dec 06, 2024 IST | Web Editor
நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்   இந்தியாவின் நிலைப்பாடு என்ன   மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Advertisement

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார் .

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர்.இந்த போரில் இது வரை 44,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர்.

இதனால் இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல நாடுகள் அழைப்பு விடுத்த போதிலும் ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார் .

ஆனால் ஹமாஸிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவித்து போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை இஸ்ரேல் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தியும் மறு தேர்தலை நடத்தக் கோரியும் பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்ற நீதிமன்றம் கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்போது, சர்வதேச குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது, எங்களுடைய உறுப்பினர் நிலைப்பாடு பற்றி மிக சிறந்த காரணத்திற்காக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.ஒரு பெரிய அளவிலான கவனத்துடன் மேற்கொண்ட பரிசீலனை முடிவில், அதில் உறுப்பினராக வேண்டாம் என இந்தியா முடிவெடுத்தது.அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றம் நிறைவேற்றும் எந்தவொரு முடிவும், எங்களை கட்டுப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement