’ஆரோமலே’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் தற்போது சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள `ஆரோமலே' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கிஷன் தாஸ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் நடித்துள்ளார்.
இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திலிருந்து இதுவரை 'எப்படி வந்தாயோ'. 'டண்டணக்கா லைப்' ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று ஆரோமலே படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் நவம்பர் 7ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ready to fall in love all over again? ❤️✨#Aaromaley in theaters from November 7th! #AaromaleyFromNov7@kishendas #HarshathKhan @SarangThiagu @ShivathmikaR @vinod_offl@aditi1231 @akash_megha @anirudhsriraman #VTVGanesh #Sibijayakumar @namritha_mv #SandhyaWinfred… pic.twitter.com/b9sfKG5ken
— Mini Studios LLP (@ministudiosllp) October 9, 2025