திருத்தணி முருகன் கோயில் தங்கத் தேர்த் திருவிழா - அரோகரா முழக்கத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்!
திருத்தணி முருகன் கோயிலில் மார்கழி 2-ஆம் நாள் தங்கத்தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தங்கத் தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமையான நேற்று மார்கழி மாதம் இரண்டாவது நாளை முன்னிட்டு முருகர் வள்ளி- தெய்வானையுடன் தங்கத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது முருக பக்தர்கள் தேரை பிடித்து இழுத்தவாறு மாட வீதிகளில் அரோகரா !! அரோகரா.. கோஷத்துடன் வலம் வந்து இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிப்பட்டனர்.
இக்கோயிலில் திருவள்ளூர் மாவட்டத்தை மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், மற்றும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும், இதுமட்டுமல்லால் ஆந்திரா, கர்நாடகா, போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.