Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!

07:37 PM Aug 14, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.

Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் பகுதி அருகே இருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு, நேற்றிரவு வனப்பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்குள் பாதுகாப்புப் படையினர் ஊடுருவினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :“17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” – மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!

பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி, "அசார் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 48 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது" என கூறியுள்ளது.

ஷிவ்கர்-அசார் பெல்ட் பகுதியில் இந்த சண்டை நடந்ததாக கூறியுள்ள ராணுவம், என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி காயமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளது. மேலும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அசார் பகுதியில் ஒரு ஆற்றின் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தேடுதல் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Tags :
Army captaindeathEncountersecurity forcesterrorists
Advertisement
Next Article