Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8பேர் கைது!

06:45 AM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே ஆதரவாளர்களுடன் நின்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது, ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி
மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது

இதைத் தொடர்ந்து கொலையாளிகளை  பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில்  அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து
செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர்  கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்

இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம்.  விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும். கொலை சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளோம் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கைதானவர்கள் பெயர் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது." என தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதானவர்கள் ஆற்காடு சுரேஷ்
சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன்,
சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்களையும் ரகசிய இடங்களில் வைத்து காவல்துறை
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
ArmstrongAssaultBSP Leader Armstrong
Advertisement
Next Article