Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Armstrong கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!

06:48 AM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று(செப்.,23) என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரவுடிகள், வழக்கறிஞர்கள் என நிறைய பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சீசிங் ராஜாவை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

அதன்பேரில் சீசிங் ராஜாவின் மூன்று மனைவிகள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் வசித்து வருவதாகத் தெரியவந்தது. எனவே அவர் ஆந்திராவில் பதுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. அதன்படி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைதுக்குப் பின் சென்னை அழைத்துவரப்பட்ட சீசிங் ராஜாவிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை நீலாங்கரை அருகே கொலை செய்யப்பட்ட ஆயுதத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்படி, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கைப்பற்ற போலீஸார் அவரை நீலாங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்ததால், அவரை போலீஸார் என்கவுன்ட்டர் செய்தனர்.

இந்த என்கவுன்ட்டரில் சீசிங் ராஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேங்கடத்தை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 2வது என்கவுன்டரில் சீசிங் ராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ArmstrongBSPSeezing RajaTN Police
Advertisement
Next Article