For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கவாச் தொழில்நுட்பத்திற்கும், #Mysuru-Darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை” - தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி!

11:51 AM Oct 12, 2024 IST | Web Editor
“கவாச் தொழில்நுட்பத்திற்கும்   mysuru darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை”   தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி
Advertisement

கவாச் தொழில்நுட்பத்திற்கும், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578), நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. ஆனால் இதனால் 4 தண்டவாளங்கள் சேதமடைந்து, மற்ற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளது.

பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல், லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கவாச் தொழில்நுட்பத்திகும், விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்த விபத்து மனித தவறா? அல்லது தொழில்நுட்ப பிரச்சனையா? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கவாச் தொழில்நுட்பத்திற்கும், இந்த விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்தார்.

கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?

இந்தியாவில் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP) கவாச். 2022-ம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது. அதன்படி, ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) மூலம் 3 இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய இந்த கவாச் எனும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை ரயில்வே அமைச்சகம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

கவாச், லோகோமோட்டிவ் பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு ரயில்கள் ஒரு பாதையில் வரும் போது சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் (SPAT) எனும் சமிக்ஞையை ஏற்படுத்தி ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும். இதன் மூலம் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரயிலை விபத்திலிருந்து தவிர்க்க இந்த கவாச் உதவுகிறது.

இதைவிடவும் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒருவேளை எச்சரிக்கை விடப்பட்டும் கவனக்குறைவாக ரயில் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கத் தவறும் பட்சத்தில், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தைக் குறைத்து விபத்து ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். பனி மூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் எதிரே ரயில் வந்தால் கூட முன்கூட்டியே இது எச்சரிக்கும். அதுமட்டுமல்லாமல், அவசரகால சூழ்நிலைகளில் ரயிலைக் கட்டுப்படுத்த SOS அம்சமும் இதில் இருக்கிறது.

Tags :
Advertisement